மாவட்ட கால்பந்து லீக் : பிஷப் அப்பாசாமி வெற்றி
கோவை:மாவட்ட அளவிலான 'பி' டிவிஷன் கால்பந்து போட்டியில், ஒரு கோல் வித்தியாசத்தில் பிஷப் அப்பாசாமி கல்லுாரி அணி வெற்றி பெற்றது. கோவை மாவட்ட கால்பந்து கழகம் (அடாக் கமிட்டி) சார்பில் சீனியர் ஆண்களுக்கான கால்பந்து லீக் போட்டி, சுங்கம் கார்மல் கார்டன் பள்ளியில் நடக்கிறது. இதில், 12 அணிகள் பங்கேற்று லீக் முறையில் விளையாடி வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஆட்டம் துவங்கிய, 15வது நிமிடத்தில் அப்பாசாமி அணியின் சரவணக்குமார் முதல் கோல் பதிவு செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவை பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.எப்.ஏ.,) அணியின் ஆகாஷ், 29வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, முதல் பாதி முடிவில் 1 - 1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில், 60வது நிமிடத்தில் சி.பி.எஸ்.எப்.ஏ., அணியின் யதின் பாலாஜி ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அடுத்த சில நிமிடங்களிலேயே, பதிலுக்கு அப்பாசாமி அணியின் அரவிந் (66வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அவர், 77வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.இன்றைய ஆட்டத்தில், வாகா அணியை எதிர்த்து பிஷப் அப்பாசாமி அணியும்; பிளட் ரெட்ஸ் அணியை எதிர்த்து அசோகா அணியும் விளையாடுகின்றன.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!