அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகள் விளையாட்டு போட்டி
கோவை:அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளுக்கு, இடையேயான விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், 'கே.ஜி.ஐ.எஸ்.எல்., டிராபிக்கான' மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில் மாணவர்களுக்கான, வாலிபால், கபடி, கிரிக்கெட், மாணவிகளுக்கான, வாலிபால் மற்றும் த்ரோபால் ஆகிய போட்டிகள் நடக்கின்றன.
இப்போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து, அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடந்த ஆண்கள் வாலிபால் போட்டியில், ஈஸ்வர் கல்லுாரி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் கதிர் கல்லுாரி அணியையும்; ஜி.சி.டி., அணி, 2 - 0 என்ற நேர் செட் கணக்கில் கற்பகம் கல்லுாரி அணியையும்; கே.ஜி.ஐ.எஸ்.எல்.,அணி 2 - 0 என்ற செட் கணக்கில், ஏசியன் கல்லுாரியையும் வீழ்த்தியது. இதேபோல், பெண்கள் வாலிபால் போட்டியில், கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி 2 - 0 என்ற செட் கணக்கில், கற்பகம் கல்லுாரி அணியையும் ; ஜி.சி.டி., அணி 2 - 0 என்ற செட் கணக்கில் கே.ஐ.டி., அணியையும் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறின. ஆண்கள் கபடி போட்டியில், கற்பகம் அணி, 36 - 24 என்ற புள்ளிக்கணக்கில் ராமகிருஷ்ணா கல்லுாரி அணியையும்; இந்துஸ்தான் கல்லுாரி அணி, 36 - 3 என்ற புள்ளிக்கணக்கில் யு.ஐ.டி., அணியையும் வீழ்த்தின.

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!