கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து: 3 பேர் பலி; 3 பேர் கவலைக்கிடம்
திருநெல்வேலி; திருநெல்வேலி அருகே கல்குவாரி ஒன்றில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாயினர், படுகாயம் அடைந்த 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் தனியார் கல்குவாரியில் இன்று (மே 15) நள்ளிரவு 12 மணியளவில் பாறை சரிந்தது.
இதில் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி மற்றும் பாறை அள்ளும் இயந்திரங்கள் சிக்கிக் கொண்டன. இதில் டிரைவர்கள் தொழிலாளர்கள் என 5க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஏது? மேலே நின்னுக்கிட்டு அடிப்பாறையை வெடிவெச்சு தகர்த்துட்டாங்களா?