பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும்விபரீத ஆசையில் ரூ.20 லட்சம் போச்சு!
உளுந்துார்பேட்டை:பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்ற ஆசையில், 20 லட்சம் ரூபாயை விவசாயி பறிகொடுத்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒப்பந்தம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், 45; விவசாயி. இவர், தன்னிடம் உள்ள 40 சென்ட் நிலத்தை, களமருதுாரைச் சேர்ந்த அஷரப் அலி என்பவருக்கு விற்க ஒப்பந்தம் போட்டு, 15 லட்சம் ரூபாய் பெற்றார்.மேலும், உறவினரிடம் 5 லட்சம் ரூபாய் வாங்கி, 20 லட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்தார். இந்நிலையில், லோகநாதன் நண்பரான களமருதுாரைச் சேர்ந்த அகமது அமீன் என்பவர், தனது மாமா ஷேக் உனீஸ் வீட்டில், பணத்தை இரட்டிப்பாக்கும் வட மாநில சாமியார்கள் இருவரை அழைத்து வந்துள்ளதாக, லோகநாதனிடம் கூறியுள்ளார்.உடனே, லோகநாதன் தன்னிடம் உள்ள 20 லட்சம் ரூபாயை இரட்டிப்பாக்கி தரும்படி கேட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிஅளவில், லோகநாதன் வீட்டிற்கு இரு சாமியார்களையும் அகமது அமீன், ஷேக் உனீஸ் அழைத்துச் சென்றுள்ளனர்.லோகநாதனிடமிருந்த 20 லட்சம் ரூபாயை வாங்கி, வீட்டிற்குள் வைத்து சாமியார்கள் பூஜை செய்ய துவங்கினர்.
மோசடி
அப்போது, பூஜை செய்யும் இடத்தில் இருந்தால் சாமி அடித்துவிடும் எனக்கூறி, லோகநாதன், அவரது மனைவி ஜெயக்கொடி, ஷேக் உனீஸ், முகமது அமீன் ஆகியோரை அருகே உள்ள அரிகிருஷ்ணன் வீட்டிற்கு சாமியார்களே அழைத்துச் சென்று உள்ளனர்.சிறிது நேரம் கழித்து லோகநாதன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சாமியார்கள் இருவரும் 20 லட்சம் ரூபாயுடன் காரில் தப்பியது தெரியவந்தது.இந்த மோசடி குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!