அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில்பெட்ரோல் குண்டு வீச்சு
திருவாரூர்:முத்துப்பேட்டை அருகே அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, செம்படவன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரபோஸ் அ.தி.மு.க., நகர இளைஞர் அணி துணைச்செயலர். இவரது வீடு, அதே ஊரில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது.நேற்று அதிகாலை, இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. முத்துப்பேட்டை போலீசில் சந்திரபோஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரிக்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!