விருதுநகர் சிறையில் கைதிகள் மோதல்
விருதுநகர்:விருதுநகர் சிறையில் ஜாமின் எடுப்பது தொடர்பாக, கைதிகள் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது.
விருதுநகர், வீரசோழனையைசேர்ந்த சிலம்பரசன், இருளாண்டி, வசந்தபாண்டி, இருள் ஆகிய நால்வரும் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சிலம்பரசன் ஜாமின் பெற்று வெளியே வர முயற்சி மேற்கொண்டார். கூட்டாளிகள் 3 பேரும், தங்களுக்கும் ஜாமின் விண்ணப்பிக்க கூறி உள்ளனர்.
அதற்கு சிலம்பரசன் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த இருளாண்டி, வசந்தபாண்டி, இருள் ஆகிய மூவரும், நேற்று முன்தினம் காலை உணவு வேளைக்காக வெளியே வந்த போது சிலம்பரசனை பலமாக தாக்கினர். சிறைக்காவலர்கள் மோதலை தடுத்து, சிலம்பரசனை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிறைக்கண்காணிப்பாளர் தாமரைக்கனி புகாரில், மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!