ஈரோடு:'கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த லாட்டரி வியாபாரியான, ஈரோடு மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலரின் கணவரிடம் 62 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து விட்டேன்' என, வீடியோ வெளியிட்டு, நுால் கமிஷன் ஏஜன்ட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நஷ்டம்
ஈரோடு, எல்லப்பாளையம், முல்லை நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 54; இவரது மனைவி மாலதி, 52. இவர்களின் மகள்கள் திவ்யபாரதி, நித்யா ஆனந்தி. கணவர் இறந்துவிட்டதால், திவ்யபாரதி பெற்றோர் வீட்டில் உள்ளார். இளையமகள் நித்யா ஆனந்தி, குமாரபாளையத்தில் வசிக்கிறார். ராதாகிருஷ்ணன் தறிப்பட்டறை நடத்தி, நஷ்டம் ஏற்பட்டதால் சில ஆண்டுகளாக நுால் கமிஷன் ஏஜன்டாக இருந்தார்.இதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில், அவர் வீடியோ ஒன்றில், தற்கொலை செய்து கொள்ள போவதாக பதிவு செய்து, நண்பர்கள், உறவினர்கள், மகள்களுக்கு அனுப்பிவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீடியோவில் அவர் கூறியிருப்ப தாவது: கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த, ஈரோடு மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில்குமார். லாட்டரி வியாபாரியான இவரிடம், 62 லட்சம் ரூபாயை இழந்து விட்டேன். இனியும் உயிருடன் இருந்தால், அடிமையாகி மொத்தமாக அனைத்தையும் இழந்துவிடுவேன். தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். செந்தில்குமாரிடம் இருந்து, 30 லட்சம் ரூபாயை நண்பர்கள் நஷ்ட ஈடாக வாங்கிக் கொடுக்க வேண்டும்.லாட்டரி தொழிலை ஒழித்துவிடுங்கள். பல குடும்பங்கள் காப்பாற்றப்படும்.இவ்வாறு அதில் பேசியுள்ளார்
.மனைவி மாலதி அளித்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ராதாகிருஷ்ணன் உண்மையாகவே செந்தில்குமாரிடம், 62 லட்சம் ரூபாய் வரை லாட்டரியில் இழந்தாரா என்பது குறித்தும், அவருக்கு 62 லட்சம் ரூபாய் சொத்து இருந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து செந்தில்குமார் கூறியதாவது:ராதாகிருஷ்ணனை நான் பார்த்ததே இல்லை. நான் ரியல் எஸ்டேட், கேபிள் தொழில் செய்கிறேன். நகை கடை திறக்க முடிவு செய்துள்ளேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், லாட்டரி தொழிலை விட்டு விட்டேன்.
காழ்ப்புணர்ச்சி
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிலர் செய்யும் சதி இது. அரசியலில் எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க, இதுபோன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணன், லாட்டரி வியாபாரி செந்தில்குமார் இருவருமே, தி.மு.க., பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!