கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று காலை முதலே இடைவிடாது பெய்த மழையிலும், சுற்றுலா பயணியர், குடையுடன் வலம் வந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், பள்ளி விடுமுறை, வார இறுதி நாளான நேற்று ஏராளமான வாகனங்கள் கொடைக்கானலில் முகாமிட்டன. சுற்றுலா பயணியரின் வருகையால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.காலை 11:00 மணிக்கு துவங்கிய மழை, மாலை வரை மிதமாக பெய்து கொண்டே இருந்தது.
எனினும் இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், வனச் சுற்றுலாத்தலங்களில் பயணியரின் கூட்டம் அலைமோதியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு, பூங்காவில் உள்ள மலர்களை கண்டு ரசித்தனர். குதிரை, சைக்கிள், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மழையால் பெரும்பாலான பயணியர் விடுதியில் முடங்கினர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக்கூட்டத்துடன், இதமான சூழல் நிலவியது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!