தந்தைக்கு பதில் மகனிடம் விசாரணைஎஸ்.ஐ., உட்பட மூவர் துாக்கியடிப்பு
ராணிப்பேட்டை:தந்தைக்கு பதில் மகனிடம் விசாரணை நடத்திய எஸ்.ஐ., மற்றும் இரு போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநெல்லுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 55; அரிசி வியாபாரி. இவர், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 1ம் தேதி புகார் கொடுத்தார். அதில், சோளிங்கர், ஜோதிபுரத்தைச் சேர்ந்த நடராஜன், 40, தன்னிடம் நெல் வாங்கியதற்கு 25 ஆயிரம் ரூபாய் பாக்கி தர வேண்டும். பணம் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்துவதாக கூறினர்.ஆறுமுகத்திடம் விசாரிக்காமல், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., இறுதியாண்டு படித்து வரும் அவரது மகன் ஹரிகிருஷ்ணனை, 21, கடந்த, 4ம் தேதி சோளிங்கர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, ஒரு நாள் முழுதும் வைத்து விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
இது குறித்த புகார்படி, சோளிங்கர் ஸ்டேஷன் எஸ்.ஐ., பசலைராஜ், போலீசார் சுந்தரபாண்டியன், பரத் ஆகியோர் கள்ளக் குறிச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் குறித்து தகவல் தெரிவிக்காத சோளிங்கர் தனிப் பிரிவு எஸ்.ஐ., அண்ணாமலையை, பணியிலிருந்து விடுவித்து, ராணிப்பேட்டை எஸ்.பி., தீபா சத்யன் உத்தரவிட்டுஉள்ளார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!