Load Image
Advertisement

தி.மு.க., கவுன்சிலர் தான் சாவுக்கு காரணம்தற்கொலை செய்த ஊராட்சி செயலர் கடிதம்

Tamil News
ADVERTISEMENT
வேலுார்:'என் சாவுக்கு காரணம், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் தான்' என, கடிதம் எழுதி வைத்து, ஊராட்சி செயலர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்த ராமநாயினிகுப்பத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 39; ராமநாயினிகுப்பம் ஊராட்சி செயலராக, 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் அலுவலக கோப்புக்களை பார்ப்பதாக கூறி சென்றவர், நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. அவரது மனைவி காந்திமதி, 29, கதவை உடைத்து பார்த்த போது, அங்கிருந்த மின் விசிறியில் ராஜசேகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

வேப்பங்குப்பம் போலீசார் உடலை மீட்டனர். தற்கொலைக்கு முன் அவர் எழுதி, சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மூன்று பக்க கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.அதில், 'காந்திமதி என்னை மன்னித்து விடு. குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள். நான் உன்னை விட்டு போகிறேன். என் சாவுக்கு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஹரியும், தி.மு.க., பிரமுகரான அமுதா துரைசாமியும் தான் காரணம்' என, எழுதி இருந்தார்.

ராஜசேகரின் அண்ணன் அசோக்குமார் கொடுத்த புகாரில், வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.விசாரணையில், ராஜசேகர் தம்பி மணிக்கு, ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி, அணைக்கட்டு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஹரி, 2.50 லட்சம் ரூபாய் பெற்று, வேலை வாங்கித் தராமல் இருந்துஉள்ளார்.கொடுத்த பணத்தை ராஜசேகர் கேட்டதற்கு, கவுன்சிலர் ஹரியும், தி.மு.க., பிரமுகர் அமுதா துரைசாமி ஆகியோரும் ராஜசேகரை மிரட்டி உள்ளனர்.


மேலும், ராமநாயினிகுப்பம் ஊராட்சியில் அதிகளவு நிதி மோசடி நடந்ததாகவும், அதை தட்டிக்கேட்டதால், தீர்மானம் நிறைவேற்றி ராஜசேகரை வேலையை விட்டு நீக்க நடவடிக்கை எடுத்ததும் தெரியவந்தது.இதனால் மனமுடைந்த ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.


தி.மு.க.,வினரின் மிரட்டலால் ஊராட்சி செயலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாவட்டத்தில் உற்ற பிற ஊராட்சி செயலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.இது குறித்து வேலுார் மாவட்ட ஊராட்சி செயலர்கள் நலச்சங்க செயலர் குமார் கூறுகையில், ''ராஜசேகர் தற்கொலைக்கு காரணமான தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஹரி, தி.மு.க., பிரமுகர் அமுதா துரைசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ''தமிழக அரசு இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement