Load Image
Advertisement

முதியவர் கொலை: ஊராட்சி தலைவி கைது கோரி மறியல்

Tamil News
ADVERTISEMENT
பெண்ணாடம்:தேர்தல் முன்விரோதத்தில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஊராட்சி தலைவியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 75; ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவரது மூத்த மருமகள் கோமளவள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடந்த தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்ட அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு மனைவி மணிமேகலை வெற்றி பெற்றார். இருதரப்பினருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்தது.

வழக்கு பதிவு



கடந்த 12ம் தேதி பெரியசாமியை ஊராட்சி தலைவி மணிமேகலை, கணவர் விஷ்ணு, 28; மாமனார் கலியன், 56 உட்பட ஏழு பேர் கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.மோதலில் காயமடைந்த பெரியசாமியின் இளைய மகன் கோபி, மனைவி சங்கீதா, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விஷ்ணு, அவரது தந்தை கலியன், சகோதரர் அஜய்குமார், ஊராட்சி தலைவி மணிமேகலை, உறவினர் சுப்ரமணியன், விஷ்ணுவின் வட மாநில உறவினர்கள் இருவர் உட்பட ஏழு பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.


போக்குவரத்து பாதிப்பு


விஷ்ணு, கலியனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஊராட்சி தலைவி மணிமேகலை உட்பட ஐவரை தேடி வருகின்றனர்.அவர்களை கைது செய்யக் கோரி, பெரியசாமியின் உறவினர்கள் விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், விளாங்காட்டூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று பகல் 12:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சு நடத்தி, இரண்டு நாட்களில் கைது செய்வதாக உறுதியளித்தனர். அதையேற்று, அவர்கள் கலைந்தனர். இதனால் விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில், தாழ நல்லுாரில் தலை மறைவாக இருந்த ஊராட்சி தலைவி கொழுந்தன் அஜய்குமார், 25, போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement