dinamalar telegram
Advertisement

கூலி தொழிலாளி கழுத்தறுத்து கொலை

Share
ராசிபுரம்:ராசிபுரத்தில் நள்ளிரவில் தொழிலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், வெங்கடசாமி தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஈஸ்வரன், 26. இவரது மனைவி சுகன்யா, 21. இவர், பட்டணத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.ஈஸ்வரன் இரவு நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். பின் வீட்டிற்கு வந்து படுத்து உள்ளார். இரவு 11:00 மணியளவில் ஈஸ்வரன் தம்பி ஆனந்தவேல் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கே ஈஸ்வரன் கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.நாமக்கல் எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி நேரில் விசாரணை நடத்தினார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement