திருப்பூர்:திருப்பூரில் முறைகேடாக சுற்றித்திரிந்த வங்க தேச வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சவுடாம்பிகை நகரில், முறைகேடாக வங்கதேசத்தினர் சிலர் தங்கிருப்பது குறித்து மத்திய உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வீரபாண்டி போலீசார் ரோந்து மேற்கொண்டு, அப்பகுதியில் சுற்றிய நபரை பிடித்து, அவரிடம் இருந்த ஆதார் கார்டை பறிமுதல் செய்து விசாரித்தனர்.
குஜராத் மாநில முகவரியில், அம்ரூல் சேக் என்ற பெயரில், அந்த நபரின் போட்டோ இருந்தது. இவை போலியானது என, போலீசாருக்கு தெரிந்தது.விசாரணையில், அந்நபர் வங்கதேசத்தைச் சேர்ந்த அலமின் மியலாம், 34, என்பது தெரிந்தது. ஓராண்டாக கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்ததும் தெரிந்தது. இவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!