dinamalar telegram
Advertisement

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க விரைவில் அறிவிப்பு

Share
புதுடில்லி-''வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் விபரங்களை இணைப்பது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு மிக விரைவில் வெளியிடும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்து நேற்று ஓய்வு பெற்ற சுஷில் சந்திரா தெரிவித்தார்.தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவர் நேற்று கூறியதாவது:என்னுடைய பதவி காலத்தில் இரண்டு முக்கிய தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன்.

அதிக சேவைவாக்காளர் பட்டியலில், 18 வயதுக்கு மேற்பட்டோர் தங்களுடைய பெயரை பதிவு செய்வதற்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதை, ஆண்டுக்கு நான்கு முறையாக மாற்ற பரிந்துரைத்தோம். இதற்கான மசோதா நிறைவேறியுள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.அடுத்தது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விபரங்களை இணைப்பது. இதன் வாயிலாக, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒழிக்க முடியும். மேலும், வாக்காளர்களுக்கு அதிக சேவைகளை வழங்க வாய்ப்பு கிடைக்கும்.இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு மிக விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

பெரிய சவால்இது கட்டாயமில்லை; என்றாலும், ஆதார் விபரங்களை இணைக்காததற்கு நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.பதவிக் காலத்தில் சந்தித்த மிகப் பெரிய சவால், உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தியதுதான். கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த நிலையில், அந்த சவாலை சிறப்பாக கையாண்டோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • rasaa - atlanta,யூ.எஸ்.ஏ

  சரியான முடிவு.

 • duruvasar - indraprastham,இந்தியா

  ஆதாருடன் இணைத்து வைத்து வைத்துவிட்டார் ஆப்பும்மா.

 • W W - TRZ,இந்தியா

  வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் விபரங்களை இணைப்பது தொடர்பான அறிவிப்புகள வறவெற்க தக்கது .அதேபோல் ரேசன் கார்ட்,பாஸ்போர்ட் ,டிரவிங் லய்சென்ஸ், Land registrations னீலும்,பாங்கு அக்கவுண்டிலும் , எல்லவற்றிலும் ஆதார் கார்டை இணக்க வேண்டும். ஆதார் கார்டை National ID ஆக பாவிக்க வேண்டும் இதனை மக்கள் உணருப்படி அரசு தக்க அறிக்கை வெளியிட வேண்டும்.இதனால் நிறைய Fraud களை நீக்க அல்லது தவிற்க்க முடியும்.Jai Hind.

 • GMM - KA,இந்தியா

  வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பை கட்டாயம் ஆக்குங்கள். 18 வயதிற்கு மேல் 4 முறை முதல் பதிவு. பிறப்பு இறப்பு பதிவு கட்டாயம் இல்லை? தேர்தல் ஆணையம் வயதை உடன் எப்படி அறியும்? இறந்தவர் பெயரை உடன் எப்படி நீக்கும்? 18 வயது துவக்கம் என்றால் 58 வயதுக்கு பின் வாக்குரிமை நீக்க வேண்டும். அல்லது முதல் மற்றும் 58 வயதிற்கு பின் வாக்கு ஊராட்சி, நகராட்சிக்கு மட்டும் செலுத்த அனுமதிக்க வேண்டும். தற்போதைய தேர்தல் முறை வாக்கு குறைந்த சமூகத்தை அரசியல் கட்சிகள் ஒடுக்க வாய்ப்பு கொடுத்து வருகின்றன. அனைவருக்கும் வாக்கு முறையால் மக்கள் தொகை. பெருக்கத்தை கட்சிகள் தடுக்க விரும்புவது இல்லை. வாக்கு பெற குற்றவாளிகளை காக்க மசோதா தாக்கல். ஆதரவு வாக்கு அதிகம் இருந்தால் போதும். எதிர் வாக்கு பற்றி தேர்தல் ஆணையம் பொருட்படுத்தாமல் உள்ளது. ஆதரவு எதிர் வாக்கு ratio தேவை.

 • R S BALA - CHENNAI,இந்தியா

  ஆதாருடன் முதன் முதல் இணைத்திருக்கவேண்டிய ஆவணம் வாக்காளர் அட்டையாகத்தான் இருந்துருக்க வேண்டும், அதை கடைசியாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள், நடைமுறைப் படுத்துவதில் ஆமை வேகம் வேறு.

  • ஆரூர் ரங் - ,

   கோர்ட் ஆணையால்தான் தாமதம்.🙄 அங்கிருந்து இன்னும் கொஞ்சம் தொந்தரவு பாக்கியிருக்கிறது

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்