முட்டாள்... மூதேவி... என வசைபாடிய இயக்குனர்:எதிர்ப்பு தெரிவித்த சிவகங்கை நகராட்சி கமிஷனர் சஸ்பெண்ட்
சிவகங்கை:'வீடியோ கான்பரன்ஸ்' ஆய்வு கூட்டத்தில், சக மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள் முன்னிலையில், 'முட்டாள்... மூதேவி' என, நகராட்சி நிர்வாக இயக்குனர் திட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களின் ஆய்வு கூட்டம், மே 13ம் தேதி இரவு 8:00 மணிக்கு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா கூட்டத்தை நடத்தினார்.
அப்போது, 'சிவகங்கை நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் பங்களிப்பு தொகை இல்லாத திட்ட பணிக்கான முன் அனுமதியை ஏன் வழங்கவில்லை?' என, சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனிடம், பொன்னையா கேட்டுஉள்ளார்.
இதற்கு, இன்ஜினியரிங் பிரிவில் இருந்து ஆவணம் வரவில்லை என்றும், அந்த ஆவணத்தை பார்த்து பதில் தருவதாகவும் கமிஷனர் கூறியுள்ளார்.இதைக்கேட்ட பொன்னையா, சிவகங்கை கமிஷனரை,
'முட்டாள்... மூதேவி' என, அனைவரது முன்னிலையிலும் திட்டியுள்ளார்.'அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள் முன்னிலையில் இப்படி பேசாதீர்கள்' என, பாலசுப்பிரமணியன் அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொன்னையா, பாலசுப்பிரமணியனை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
பொறியாளர் பாண்டீஸ்வரிக்கு கமிஷனர் பொறுப்பு வழங்கப்பட்டது.சிவகங்கை நகராட்சி தலைவர் துரை ஆனந்த், கமிஷனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மழை நீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றி வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் சிலர், இயக்குனர் பொன்னையாவின் உறவினர்கள் எனக்கூறி, அதிகாரிகளை மிரட்டிஉள்ளனர். அப்போது, 'சட்டப்படி தான் வேலை செய்கிறோம்' என தலைவர், கமிஷனர் கூறியதாக தெரிகிறது. இந்த விவகாரத்தையும், கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்தையும் தொடர்புபடுத்தி, நகராட்சி ஊழியர்கள் பேசிக் கொள்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!