முதல்வர் கூட்டம் மழையால் ஒத்திவைப்பு
ஆத்துார்:''ஆத்துாரில் வரும் 18ம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கவிருந்த பொதுக்கூட்டம், மழையால் ஒத்தி வைக்கப்படுகிறது,'' என அமைச்சர் நேரு கூறினார்.
சேலம் மாவட்டம், ஆத்துாரில், தி.மு.க., சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், வரும் 18ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க இருந்தது.இதற்கான ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்த, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறியதாவது:
இம்மாதம் 18ம் தேதி, ஆத்துாரில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருந்த கூட்டம், வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு கனமழை இருப்பதாக, வானிலை மையம் எச்சரித்துள்ளதால், கூட்டம் நடத்த வேண்டாம் என முதல்வர் கூறினார். 'தினமலர்' நாளிதழிலும் ஐந்து நாட்களுக்கு மழை உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளதால், கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!