துணை ஜனாதிபதி வருகை ஒரு நாள் ஒத்திவைப்பு
ஊட்டி:ஊட்டிக்கு துணை ஜனாதிபதி வருகை ஒரு நாள் ஒத்தி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணமாக வரும் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, இன்று குன்னுார் ராணுவ கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீபா பின் ஷையத் அல் நயான் மறைவையொட்டி, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வெங்கைய்யா நாயுடு அபுதாபி செல்வதால், இன்றைய நிகழ்ச்சி நாளை மாற்றப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், ஊட்டி வரும் துணை ஜனாதிபதி ராஜ்பவனில் தங்குகிறார். 20ம் தேதி ஊட்டி ராஜ்பவனிலிருந்து புறப்பட்டு டில்லி செல்கிறார் என, பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!