திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் கீழடி 8ம் கட்ட அகழாய்வில் இரண்டு சிவப்பு பானைகள் வெளிப்பட தொடங்கியுள்ளன.கீழடியில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகின்றன.
பானைகளுடன் கூடிய நீண்ட சுவர், தோடுடன் கூடிய தலைப்பகுதி சுடுமண் பொம்மை, நீள் வடிவ தாயகட்டை என கீழடியில் தொடர்ந்து பண்டைய கால பொருட்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.7ம் கட்ட அகழாய்வின் போது சிவப்பு பானை கண்டறியப்பட்டது. நான்கு அடி உயரம் கொண்ட அது தானிய சேமிப்பு பானையாக இருக்கலாம் என கருதப்பட்டது.
8ம் கட்ட அகழாய்விலும் அதே போன்று இரண்டு பானைகள் அருகருகே வெளிப்பட்டுள்ளன. இதுவரை மூன்று அடி உயரம் வெளிப்பட்டுள்ள நிலையில் இன்னமும் கீழ்ப்பகுதி வெளிப்படாததால் இதன் உயரம் அதிகரிக்க கூடும் என தெரிகிறது. சேதமடைந்துள்ள இப்பானையை முழுமையாக வெளிகொணர தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!