சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
பெ.நா.பாளையம்:சின்னதடாகம் அருகே நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் உள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடக்கிறது.சின்னதடாகம் அருகே வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் கிராமம் அழகர் நகரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது.கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு விக்கிரகங்கள் பட்டினப்பிரவேசம் நடந்தது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, வேத பாராயணம், திவ்ய பிரபந்தம் தொடக்கம், சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை வேதபாராயணம், மதியம், 2:00 மணிக்கு மேல் புதிய விக்ரகங்களுக்கு திருமஞ்சனம் நடந்தது.இன்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!