மண்டல அறநிலையத்துறையில்மூன்று உதவி கமிஷனர்கள் மாற்றம்
கோவை:பொதுநலன் மற்றும் அரசு நிர்வாக நலன் கருதி, ஹிந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் உதவி கமிஷனர்கள், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த உதவி கமிஷனர் விஜயலட்சுமி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கும், மாசாணியம்மன் கோவிலில் உதவி கமிஷனராக இருந்த கருணாநிதி, கோவை மண்டல இணை கமிஷனர் அலுவலகத்துக்கும், மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் மாரியம்மன் விநாயகர் கோவிலில் செயல் அலுவலர் நிலை 1 ஆக பணிபுரிந்து வந்த கைலாசமூர்த்தி, பதவி உயர்வு பெற்று மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் மேலும் 22 பேர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு உதவி கமிஷனர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக அரசின் முதன்மை செயலாளர் சந்திரமோகன் பிறப்பித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!