உத்திரமேரூரில் துாய்மை பணி
உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், ஒருங்கிணைந்த துாய்மை பணி திட்டத்தின் கீழ், பல்வேறு இடங்களில் நேற்று, துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, அனைத்து பேரூராட்சிகளிலும், ஒருங்கிணைந்த துாய்மை பணி முகாம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இப்பணி நடக்கிறது.
அதன்படி, உத்திரமேரூர் பாலசுப்பிரமணியகோவில் வளாகம், சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் பகுதி மற்றும் நல்ல தண்ணீர் குளக்கரை, பூங்கா பகுதிகளில், ஒருங்கிணைந்த துாய்மை பணி நேற்று நடந்தது.இப்பகுதிகளில், ஆங்காங்கே போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை அனைத்தும் அப்புறப் படுத்தப்பட்டன.மேலும், பூங்கா மற்றும் கோவில் நடை பாதை ஓரங்களில் இருந்த முட்புதர்கள் அகற்றி சீரமைக்கப்பட்டது.
உத்திரமேரூர் பேரூராட்சி பணியாளர்கள் 23 பேர், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 40 பேர், மேற்கொண்டனர்.ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவர் சாந்தி, துணைத்தலைவர் இந்திரா ஆகியோர் நேற்று, துாய்மை பணியை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து 30 துாய்மை பணியாளர்கள், பேருந்து நிலைய வளாகம் முழுதும் சுத்தம் செய்தனர்.
- நமது நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!