தக்காளி காய்ச்சல் அறிகுறி :18 குழந்தைகளுக்கு சிகிச்சை
கோவை:கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தக்காளி வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன், 18 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதில், குழந்தைகள் மட்டும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல், உடல்வலி, சோர்வு, முகத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுதல் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், தக்காளி காய்ச்சல் எதிரொலியாக கோவையில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.தமிழக - கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில், சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, கோவை மாவட்டத்தில், தக்காளி வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன், 12 வயதுக்கு உட்பட்ட 18 குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''தக்காளி வைரஸ் காய்ச்சல் தானாகவே சரியாகி விடும். காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்படும். இந்த நோய் வேகமாக பரவக்கூடியது. ஆனால் விரைவில் சரியாகி விடும். ஆகையால், குழந்தைகள் தனிமையில் இருப்பது நல்லது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!