பா.ஜ., ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள்... கொண்டாட்டம்: வீதி தோறும் பிரசாரம் செய்ய முடிவு

சிறு கையேடு
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக, எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த முடியாத நிலை இருந்தது. அவற்றை ஈடுகட்டும் வகையில், இந்த ஆண்டு மொத்தமாக கொண்டாடி விட வேண்டுமென, நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்வமாக உள்ளனர்.இதையடுத்து, கடந்த சில வாரங்களாகவே மேலிடத் தலைவர்கள் இது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவின்பேரில், 26 பக்கங்களைக் கொண்ட சிறு கையேடு தயாரிக்கப்பட்டுஉள்ளது.
8 ஆண்டுகள்
'சேவை, சிறந்த நிர்வாகம், ஏழைகளுக்கான நலன்கள்' என்ற தலைப்பிலான இந்த கையேட்டில், மத்திய அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டு மென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அது பற்றிய விபரம்:ஒவ்வொரு பா.ஜ., தொண்டரும், 10 நாட்களுக்கு, மொத்தம் 72 மணி நேரம் செலவிட்டு, மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் பிரசாரம் செய்திட வேண்டும். கொரோனா தடுப்பூசி பணிகள் உள்ளிட்ட, பொது சேவைகளில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள், மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களின் நேரடி பயனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களை கவுரவிக்க வேண்டும்.பா.ஜ., அரசு, பல்வேறு துறைகளில், கடந்த எட்டு ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளை, பாடல்கள், இணையதளம், பாக்கெட் டயரிகள் என விதவிதமான வழிகள் வாயிலாக மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும்.

கருத்தரங்கு
சிறுபான்மை சமூகங்களுக்காக செய்யப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகள் குறித்து வீதிகள் தோறும் பிரசாரங்கள், சிறு சிறு ஆலோசனை கூட்டங்கள், கருத்தரங்குகளை, வரும் ஜுன் 6 முதல் 8 வரையில் நடத்த வேண்டும்.இளைஞரணி சார்பில், ஜுன் 7 முதல் 13 வரையில், மாவட்டங்கள் தோறும், பைக் பேரணிகளை நடத்த வேண்டும்; அவற்றில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -
இந்தியாவின் வளர்ச்சி அதலபாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. கேஸ் விலை பெட்ரோல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மக்களை அழுத்தி வருகிறது. இது மக்களுக்கு தெரியாதா?