சென்னையில் மழைநீர் வடிகாலைஆண்டு முழுதும் துார்வார உத்தரவு
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் முன்னேற்றம் மற்றும் மழைநீர் வடிகால் துார்வாருதல், சிறு பழுதுகளை சீரமைத்தல் குறித்து, மேயர் பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
'சிங்கார சென்னை 2.0'
கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது:'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில், 184.65 கோடி ரூபாய் மதிப்பில், 40.79 கி.மீ., மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுகிறது.கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன், 3,220 கோடி ரூபாய் மதிப்பில், 769 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகின்றன.கோவளம் வடிநிலப் பகுதிகளில் மடிப்பாக்கம், ஆலந்துாரில், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதியுதவியுடன், 150.47 கோடி ரூபாய் மதிப்பில், 39 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.
மூலதன மானிய நிதியின் கீழ், 7.41 கோடி ரூபாய் மதிப்பில், 2 கி.மீ., நீளத்திற்கு புளியந்தோப்பு பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணிகளை விரைந்து முடிப்பதுடன், பணிகளின் முன்னேற்றம் குறித்து, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். மழைநீர் வடிகால்களில், குறிப்பிட்ட பருவ மழை காலத்தை முன்னிட்டு மட்டுமின்றி, ஆண்டு முழுதும் துார்வாரி பராமரிக்க வேண்டும்.
அதன்படி, தண்டையார்பேட்டை, திரு.வி.க., நகர் மண்டலங்களில் துார்வாரும் பணிகள், தேசிய நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறுகின்றன.அதேபோல், மணலி, மாதவரம், திரு.வி.க., நகர், அம்பத்துார் ஆகிய மண்டலங்களில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், 39.12 கோடி ரூபாய் மதிப்பில், 110 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால் துார்வாருதல், சிறு பழுதுகள் சீரமைத்தல் பணிகள் நடைபெறுகின்றன.
39.26 கோடி ரூபாய்
இதை தொடர்ந்து, மூலதன நிதியின் கீழ் ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், 1,055 கி.மீ.,யில் மழைநீர் வடிகால்கள் துார்வார, 39.26 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.
இந்த பணிகளின் போது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல், வண்டல் வடிகட்டி தொட்டி இல்லாத இடங்களில் அமைத்தல்.வருங்காலங்களில் துார் வாருவதை எளிதாக்கும் வகையில், ஒவ்வொரு 5 மீட்டர் இடைவெளியில், திறந்து மூடும் வகையில் சிமென்ட் பலகைகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மேயர் பிரியா பேசினார். கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
சொல்லிட்டீங்க ... செய்ய வேண்டியது யார் ?