dinamalar telegram
Advertisement

குருவுடன் மோதும் சிஷ்யர்! காங்கிரசில் யாருக்கு எம்.பி., பதவி?

Share
Tamil News
சென்னை :ராஜ்யசபா எம்.பி., பதவியை கைப்பற்ற, காங்கிரசில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் காங்கிரசுக்கு, 18 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை அக்கட்சிக்கு தர, தி.மு.க., முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியுள்ளதாகவும் தெரிகிறது. காங்கிரசுக்கு கிடைக்கஉள்ள ஒரு ராஜ்சபா எம்.பி., பதவியை பெற, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.


இருவரும் சோனியா, ராகுல், ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளனர். பிரியங்காவையும் சந்தித்து, சிதம்பரம் பேசியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், ராஜஸ்தானில் நடந்து வரும் காங்கிரஸ் சிந்தனை முகாமில், இனி குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்குவது என முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி பார்த்தால், மகன் கார்த்தி எம்.பி.,யாக இருப்பதால், சிதம்பரத்திற்கு எம்.பி., பதவி கிடைக்க வாய்ப்பில்லை. இதனால், அழகிரி நம்பிக்கையோடு இருக்கிறார்.


சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் அழகிரி. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, அவரை பரிந்துரைத்தவரும் சிதம்பரம் தான். ஆனால், இப்போது ராஜ்யசபா எம்.பி., பதவியை பிடிப்பதில், குருவுக்கும், சிஷ்யருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன், கேரளாவில் ராஜ்யசபா எம்.பி., பதவி காலியான போது, மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மகளிர் காங்கிரஸ் தலைவியான ஜெபி மேத்தருக்கு, ராகுல் வாய்ப்பு அளித்தார்.
அதுபோல, தமிழகத்திலும் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில் போன்ற இளைஞர்கள் யாருக்காவது அதிர்ஷ்டம் அடிக்கலாம் என, காங்கிரசார் தெரிவிக்கின்றனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

  • kulandai kannan -

    எடுப்பதே பிச்சை. அதுக்கு போட்டி வேறா?

  • sankaseshan - mumbai,இந்தியா

    குருவை மிஞ்சிய சிஷ்யன் செட்டியார் நிலைமையை பாருங்க ஹார்வார்டில் படிச்சவர் தற்குறி பப்பியிடம் சிபாரிசுக்கு போகிறார் பதவி பித்தம் என்னவெல்லாம் செய்கிறது

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

    சசிகாந்த் செந்தில் சரியான தேர்வு ....

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    அழகிரி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பொழுது இவர் சிதம்பரத்தின் சிஷ்யர்.. திமுகவுடன் ஒரே கூட்டணியில் இருந்தாலும் திமுகவின் இஷ்டப்படி வளைந்து கொடுக்க மாட்டார் என்று ஆர்.எஸ்.பி. ஊடகங்கள் வருணித்தன.. ஆனால் என்ன ஆயிற்று என்பதை தமிழக மக்கள் அறிவர்... காங்கிரஸ் திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டதா என்று சந்தேகப்படும் அளவுக்கு காங்கிரசை குனிய வைத்தார் அழகிரி. அழகிரின்னு பேரு வெச்சா கில்லி மாதிரி சொல்லி அடிக்க வேணாமா எங்க மதுரை தல மாதிரி ????

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சிதம்பரம் செட்டியார் எப்படி அந்த பதவியை பிடிக்கவேண்டும் என்ற வித்தை தெரிந்தவர். அன்டோனியோ மைனோவின் குடும்ப தில்லு முல்லு ஊழல்கள் ரகசியம் தெரிந்தவர். அதனால் அவருக்கே வாய்ப்புகள் அதிகம்.

Advertisement