இது உங்கள் இடம்: ஸ்டாலின் பொய்களை இனியும் நம்பாதீங்க!
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
எஸ்.செபஸ்டின், சிவகாசி,விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்:
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்தாகி, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், பல சிக்கல்கள் உள்ளன. எனவே, அதை அமல்படுத்த வாய்ப்பில்லை' என, சூசகமாக தெரிவித்து விட்டார், தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன்.
தேர்தல் நேரத்தில் எதை எதையோ சொல்லி ஆட்சியில் அமர்ந்து விட்டோம்; இனி, அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் என்ன... நிறைவேற்றாவிட்டால் என்ன... என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் இருப்பது,இந்த அறிவிப்பின் வாயிலாக தெரிகிறது.
அரசு ஊழியர்கள் தான், அரசின் ஆணிவேர் போன்றவர்கள். எனவே, ஆணிவேருக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால், அரசு என்ற மரத்தின் நிலை என்னவாகும் என்பதை, முதல்வர் ஸ்டாலின் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்கின்றன, அரசு ஊழியர்களின் சங்கங்கள்.
முந்தைய தி.மு.க., ஆட்சியில் துணை முதல்வராகவும், அதன்பின், அ.தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர் ஸ்டாலின். பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த முடியுமா... அதற்கு மாநில அரசின் நிதி நிலைமை ஒத்துழைக்குமா என்பது பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தும்,

அரசு ஊழியர்களின் ஓட்டுகளை கவர்வதற்காக, தேர்தல்நேரத்தில் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார். இப்போது, அவற்றை நிறைவேற்ற முடியாமல், கண்விழி பிதுங்கி நிற்கிறார். 'கெட்டிக்காரரின் பொய்யும், புரட்டும் எட்டு நாளைக்கு தான் செல்லும்...' என்ற, எம்.ஜி.ஆர்., படத்தின் பாடல் வரிகளை தான், ஸ்டாலின் அரசின் அறிவிப்பு நினைவுபடுத்துகிறது.
அரசு ஊழியர்களும், பொதுமக்களும், இவர்களின் பொய்களை இனியாவது நம்பாமல் இருந்தால் சரி தான்.
வாசகர் கருத்து (66)
உடலில் ஓடுவதோ ஊழல் ரெத்தம் வாயை திறந்தால் தினமொரு பொய் சொல்லி மக்களை குஷிப்படுத்துவது தான் விடியாத விடியலின் ஒரே தொழில்
பார்த்துட்டார்
சிங்களர் பசி கண்டு மனிதநேயத்துடன் உதவும் தமிழகமே சிங்கள நாளேடு ஸ்டாலினை புகழ்ந்து
நீ இங்க ஓசிக்கோட்டருக்கு பிச்சை எடுக்குறதையும் அங்க காறித்துப்புறானுங்க...த்தூ
எரியுதா எரியட்டும் சந்தோசமா இருக்கு
இது ஒரு தவறான அரசியல் , திமுக நடந்துகொள்வது தவறு , பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவது தரம் தாழ்ந்த அரசியலை டி மு க வும் செய்வது வருந்தத்தக்கது
"பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த முடியுமா... அதற்கு மாநில அரசின் நிதி நிலைமை ஒத்துழைக்குமா என்பது பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தும்," appadiyaa.. nalla theriyuma .... eppadi
கெட்டிக்காரனின் புளுகு கிடக்கட்டுங்க.. புளுகை நம்பி எல்லோரும் வாக்களிக்கவில்லை. ஓட்டுக்கு நோட்டு செஞ்ச வேலை. ரோடில் வித்தைகாட்டும் மந்திரவாதி மந்திரத்தில் மாங்காய் வரவைக்கிறேன் என்று சொல்லி ஒருமுறை கூட மாங்காயை காட்டியதில்லை. ஆனால் அதே வித்தையை எத்தனை முறை காட்டினாலும் நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டம் இருக்கு. அதை போன்ற கூட்டம் தான் தேர்தல் வாக்குறுதிகளை ஆழ்ந்து சிந்திக்காமல் பணத்துக்கு ஆசைபட்டு ஓட்டுகளை போட்டு விடுகிறது. படித்த அறிவுள்ளவர்கள் போடும் ஓட்டுக்கள் சரியாக போட்டிருந்தாலும் மெஜாரிடி கிடைக்காமல் வீணாகி போகிறது... தேர்தல் ஆணையம் Full swing சரியான நடவடிக்கை மேற்கொண்டால் தான் நாணயமான தேர்தலை இனி எதிர்பார்க்க முடியும். ஓட்டளித்த பின் புலம்புவதை தவிர வேறுவழியில்லை.