dinamalar telegram
Advertisement

பார்சல் ரயில் தனியாருக்கு குத்தகை!

Share
Tamil News
சென்னை:தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக 'பார்சல்' ரயில், தனியாருக்கு ஆறு ஆண்டுகளுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 45.75 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ரயில்வேயில்கட்டண உயர்வு இன்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக ரயில்வேக்கு எந்தவித செலவும் இன்றி, வருவாயை பெருக்க கவனம் செலுத்தப்படுகிறது. அதேபோல், பார்சல் ரயில்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு, அதன் வாயிலாக வருவாய் ஈட்டி வருகிறது.
அதன்படி, தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக சென்னை கோட்டத்தில், சென்னை ராயபுரம் - கவுஹாத்தி தடத்தில் பார்சல் ரயில் இயக்க, ஆறு ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. துணி வகைகள், இரு சக்கர உதிரிபாகங்கள், கார் டயர்கள், மின் விசிறி, சாக்லேட் உள்ளிட்ட சரக்கு பொருட்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ரயில்வேக்கு செலவின்றி வருவாயை பெருக்கும் நோக்கத்தில், பார்சல் ரயில் தனியாருக்கு குத்தகைக்கு அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சரக்கு பொருட்களை கையாள, ஆறு ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக தெற்கு ரயில்வேக்கு, 45.75 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். முதல் பார்சல் ரயில் சேவை, நேற்று முன்தினம் துவங்கப்பட்டுள்ளது.
15 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், ஒரே நேரத்தில் 21.9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 24 ஆயிரம் கிலோ சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும். மாதத்தில் இரு முறை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement