சென்னை:மறைந்த நடிகர் ஐசரி வேலனின் சிலையை, கமல் நேற்று திறந்து வைத்தார்.
நடிகரும், முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் 35வது நினைவு நாள், அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லுாரியில் நடந்தது. வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கே.கணேஷ் தலைமை வகித்தார். ஐசரி வேலனின் உருவச் சிலையை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகையர் லதா, ஜெயசித்ரா, ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, பாக்யராஜ், பிரசாந்த், கவுண்டமணி, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கமல் பேசுகையில், ''பொறுப்பும், பதவியும் வந்த பின்னும் நடிப்பின் மேல் உள்ள காதலால், எங்களுடன் வந்து ஐசரி வேலன் நடித்தார்.
நடித்திருக்க வேண்டியதே இல்லை; ஆனாலும் ஆசைப்பட்டு வந்தார்,'' என்றார்.எஸ்.வி.சேகர் பேசுகையில், ''நடிகர் சங்க கடனை முதன்முதலில் அடைத்தவர் விஜயகாந்த் தான். தற்போது நடிகர் சங்க பொறுப்பை, ஐசரி கணேஷிடம் ஒப்படைத்தால், கடனே வாங்காமல் கட்டடத்தை கட்டி முடிப்பார்,'' என்றார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!