விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்புவனம்,--திருப்புவனம் பேரூராட்சி சார்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தியும் மண் வளம் காக்கவும் மாணவ, மாணவிகள் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிவகங்கை ரோட்டில் தொடங்கி கோட்டை பஸ் ஸ்டாப், மார்கெட் வீதி, புதுார் வரை நடந்தது. பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!