dinamalar telegram
Advertisement

குப்பை அள்ளிய கவுன்சிலர்கள்

Share
சிங்கம்புணரி,--சிங்கம்புணரி பேரூராட்சியில் தூய்மை பாரத இயக்க சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் ஜான்முகமது முன்னிலை வகித்தனர். தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் சைக்கிளில் ஊர்வலமாக சென்று சிறுவர் பூங்கா, சேவுகமூர்த்தி கோயில் உள்ளிட்ட பகுதியில் குப்பைகளை அள்ளி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். குப்பைகளை தெருக்கள்,கழிவுநீர் கால்வாய்களில் கொட்டக்கூடாது, நகரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement