dinamalar telegram
Advertisement

n எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., பாடப்பிரிவுn சிவகங்கை கல்லுாரி மாணவிகள்

Share
சிவகங்கை,-சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் எம்.பி.ஏ., மற்றும் முதுகலை இயற்பியல், தாவரவியல் பாடப்பிரிவுகளை துவக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் காலத்தில்1998ல் அரசு மகளிர் கல்லுாரி துவக்கப்பட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலையின் கீழ் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் இரண்டு ஷிப்டுகளில் ஆயிரம் மாணவிகள் வரை படிக்கின்றனர்.இக்கல்லுாரி மூலம் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், மதகுபட்டி, திருப்புத்துார் பகுதியை சேர்ந்த மாணவிகள் பயன்பெறுகின்றனர். கல்லுாரி துவங்கிய ஆண்டில் இருந்து பி.பி.ஏ., வகுப்பு நடக்கிறது. ஆண்டுக்கு இரண்டு ஷிப்டிற்கு 120 மாணவிகள் வீதம் இளங்கலை பட்டம் முடித்து செல்கின்றனர். எம்.பி.ஏ., படிக்க மதுரை, காரைக்குடி அழகப்பா பல்கலை, பரமக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லுாரிக்கு செல்ல வேண்டும். வெகு தொலைவில் உள்ளதால் ஏழை, நடுத்தர பெண்கள்வசதியின்றி இளங்கலை பட்டத்துடன் நின்று விடுகின்றனர்.இம்மாணவிகள் உயர்கல்வி பெற இங்கு முதுகலை வணிக மேலாண்மை பாடப்பிரிவை (எம்.பி.ஏ.,) அரசு துவக்க வேண்டும். இது மட்டுமின்றி இளங்கலை அறிவியல் பாடப்பிரிவு முடிக்கும் மாணவிகள்உயர்கல்வியை தொடர எம்.எஸ்சி., இயற்பியல்,தாவரவியல் பாடப்பிரிவுகளையும் துவக்க வேண்டும். அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு மாணவிகளுக்கென போதிய ஆய்வுகூட வசதிகள் இல்லை. இக்கல்லுாரியில் அறிவியல் ஆய்வு கூடம் கட்டித்தர அரசு முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement