வீரமாகாளியம்மன் கோவில் விழாபால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
காரைக்குடி--குன்றக்குடி வீரமாகாளியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இக் கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நேற்று துவங்கியது விழாவில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களுக்கு வழிநெடுகிலும், பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றினர். திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்துஇருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!