dinamalar telegram
Advertisement

குன்றக்குடி அருகே மீன்பிடித் திருவிழா

Share
காரைக்குடி-குன்றக்குடி அருகேயுள்ள நேமம் பொட்டல்கண்மாயில் நடந்த பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் மீன் பிடித்தனர்.விவசாயப்பணிகளுக்கு பிறகு கண்மாயில் மீன்பிடி திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படும். மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவதால், விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும்.நேமம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்காடு பொட்டல் கண்மாயில் மீன்பிடித் திருவிழா பாரம்பரிய முறைப்படி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். கச்சா, ஊத்தா, வலைகள் மூலம் மக்கள் மீன் பிடிப்பில் ஈடுபட்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement