ஆளும் கட்சியினரின் அத்துமீறல்பழனிசாமி கடும் கண்டனம்
சென்னை:அரசின் அலட்சியத்தாலும், கள்ள லாட்டரி விற்பனையாலும், ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களினாலும், அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவதாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:ஈரோடு முல்லை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அப்பகுதியில் கள்ள லாட்டரி விற்ற, தி.மு.க., பெண் கவுன்சிலரின் கணவர் செந்தில்குமாரிடம், லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். 62 லட்சம் ரூபாயை இழந்துள்ளதால், தற்கொலை செய்து கொண்டார்.
கள்ள லாட்டரி விற்பனையை தடுக்க, காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனைக்குரியது. ஜெயலலிதா ஆட்சியில், லாட்டரி அறவே ஒழிக்கப்பட்டது. எங்கள் ஆட்சிக் காலத்தில், லாட்டரி சீட்டுகள் கள்ளத்தனமாக விற்கப்படுவதை, காவல் துறை இரும்புக்கரம் கொண்டு தடுத்தது. அதே காவல்துறை தான் இப்போதும் உள்ளது.
ஆனால், லாட்டரி சீட்டு அதிபர்களுடன் சேர்ந்து, கள்ள லாட்டரி விற்பது தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள். இவர்கள் மீது எப்படி காவல் துறை தைரியமாக நடவடிக்கை எடுக்க முடியும்?அடுத்து வேலுார் மாவட்டம், ராமநாயினிகுப்பம் ஊராட்சி செயலர் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டார்.
தி.மு.க., ஒன்றியக் கவுன்சிலர் அரி, ஊராட்சிக்கு வரும் நிதி முழுதும் தனக்கு வழங்க வேண்டும் என வற்புறுத்தியதால், தற்கொலை செய்து கொண்டதாக, கடிதம் எழுதி வைத்துள்ளதாக செய்தி.காவல் துறையினர் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கும் அளவுக்கு, கொள்ளைக் கும்பல், இந்த அரசில் பலம் பெற்றுஉள்ளது. இதைப் பார்க்கும்போது, இந்த அரசின் விளம்பர ஆட்சி, இன்னும் எத்தனை நாள் நிலைக்கும் என்ற கேள்வி, தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!