ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு77 மாதமாக பஞ்சப்படி உயர்வு நிறுத்தி வைப்பு
சிவகங்கை,-தமிழகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 77 மாத காலமாக பஞ்சப்படி உயர்வு நிறுத்தி வைத்துஇருப்பது அநீதி என ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி, ஆசிரியர் நலச்சங்க மாநிலதலைவர் முரளீதரன், பொதுச்செயலாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.அவர்கள் தெரிவித்திருப்பதாவது: தமிழக நிதியமைச்சர்மே 7 அன்று நடந்த மானியக்கோரிக்கை விவாதத்தின் போது மீண்டும் ஒரு முறை பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என தெரிவித்திருப்பது வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரத்தின் போதும், அதன் பின்னரும் தொடர்ந்து தேர்தல் கால வாக்குறுதி படிப்படியாக அமல்படுத்தப்படும், என கூறி வருகிறார்.தமிழக அரசு எப்.ஆர்.டி.ஏ.,ல் சேராத நிலையில் ஊழியர்களிடம் பிடித்தம்செய்த பணத்தின் ஒரு பகுதியை கருவூலக கணக்குத்துறையிலும், எல்.ஐ.சி., யில் டெபாசிட் செய்துள்ளதாக நிதியமைச்சரே கூறியிருந்தார். முதல்வரின் வாக்குறுதிக்கும், இவரது கூற்றுக்கும் முரணாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து முதல்வர் விளக்க வேண்டும்.ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 77 மாதமாக பஞ்சப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது அநீதி மட்டுல்ல வஞ்சனையாகும். தொடர் போராட்டத்திற்குப் பின்னரும் பட்ஜெட் கூட்டத்தில், 3 சதவீத அகவிலைப்படிஉயர்வு குறித்து அறிவிப்புஇல்லாதது ஓய்வூதியர்களை ஏமாற்றத்திற்குஉள்ளாக்கியுள்ளது. முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!