ADVERTISEMENT
வேலூர்: என் சாவுக்கு காரணம் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரே என கடிதம் எழுதி வைத்து விட்டு, கிராம ஊராட்சி செயலாளர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்த ராமநாயினிகுப்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர், 39. இவர் ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். நேற்று(மே 13) இரவு 6:00 மணிக்கு அவரது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு அலுவலக கோப்புக்களை பார்ப்பதாக கூறி அவர் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாக அறை கதவு திறக்காததால், உறவினர்களுடன் அவர் மனைவி காந்திமதி, 29, கதவை உடைத்து பார்த்த போது, அங்கிருந்த மின் விசிறியில் ராஜசேகர் துாக்கிட்டு பிணமாக தொங்கினார்.

வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் எழுதி சட்டை பையில் எழுதி வைத்திருந்த மூன்று பக்க கடிதத்தை கைப்பற்றினர்.
கடிதத்தில், மனைவி காந்திமதி என்னை மன்னித்து விடு. குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள். நான் உன்னை விட்டு போகிறேன். என் சாவுக்கு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஹரியும், தி.மு.க., பிரமுகருமான அமுதா துரைசாமி ஆகிய இருவரும் தான் காரணம் என எழுதி வைத்திருந்தார்.
ராஜசேகரின் அண்ணன் அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில், வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ராஜசேகர் தம்பி மணிக்கு, ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி அணைக்கட்டு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஹரி என்பவர் 2.50 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு வேவேலை வாங்கித் தரவில்லை.
கொடுத்த பணத்தை கேட்டதற்கு ஒன்றிய கவுன்சிலர் ஹரியும், அமுதா துரைசாமி ஆகியோர் ராஜசேகரை மிரட்டினர்.
ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சியில் அதிகளவு நிதி மோசடி நடந்ததாகவும், அதை தட்டிக் கேட்ட ஊராட்சி செயலாளர் ராஜசேகரை தீர்மானம் நிறைவேற்றி வேலையை விட்டு நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும், அப்போது தன் தம்பி வேலைக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு தர மறுத்ததால் மனமுடைந்த ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது.
வாசகர் கருத்து (14)
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், திமுக ஆட்சி நிலைக்கவேண்டுமென்றால், கவுன்சிலர் ஹரி, தி.மு.க., பிரமுகர் அமுதா துரைசாமி போன்ற கட்சிக்கு பங்கம் விளைவிக்கும் கட்சி உறுப்பினர்களை உடனே கலையெடுக்கவேண்டும். இல்லையென்றால் மிச்சமுள்ள நான்கு ஆண்டு ஆட்சி கூடிய சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும். சங்குதான்...
திராவிட மாடல்... ஹி ஹி..
ஆழ்ந்த இரங்கல் இது குறித்து கூட்டணி விசுவாசிகள் வாய் திறக்க மாட்டார்கள் எங்கே சைகோ குருமா கம்மி குரூப்
இதெல்லாம் நடக்கும் என வாக்களித்தவர்களுக்கு தெரியாதா என்ன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வேலூரில் ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை: தி.மு.க., கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு: இந்த தி.மு.க வினரால் இன்னும் எத்தனை உயிர்கள் போகும் என்று யாருக்கும் தெரியாது. இவர்களுக்கு பணம் ஒன்றுதான் குறி. தி.மு.க தலைமையின் எண்ணம் சரியாக இருக்கலாம். ஆனால் கட்சியில் உள்ள ஒருவனுக்கும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. எப்படி கொள்ளை அடிப்பது என்பது மட்டும் தான் அவர்களின் எண்ணம். இந்த மாதிரி உள்ள தேச விரோத சக்திகளை ஒளித்துகட்ட வேண்டும்.