dinamalar telegram
Advertisement

ஞானவாபி மசூதியில் ஆய்வு துவக்கம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Share
Tamil News
லக்னோ: வாரணாசி ஞானவாபி மசூதியில் பலத்த பாதுகாப்புடன் கள ஆய்வு பணிகள் துவங்கியது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்த ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது, ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது.

ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த அம்மனுக்கு, தினமும் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சிங்கார கவுரி அம்மன் கோவிலின் அமைப்பு குறித்து, வீடியோ பதிவுடன் கள ஆய்வு நடத்த, வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில், ஐந்து பேர் அடங்கிய குழுவை நியமித்தது. இந்த உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து அந்த மசூதியில், நீதிமன்ற உத்தரவுப்படி கள ஆய்வு துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அங்கு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற கமிஷனர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் ஆகியோர் வந்தடைந்தவுடன் ஆய்வு துவங்கியதாக வாரணாசி மாவட்ட கலெக்டர் கவுஷல் ராஜ் ஷர்மா கூறியுள்ளார்.

நீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆய்வு பணிகள் துவங்கியதை தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மசூதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா

    இங்கே பதிவிடும் அறிவுள்ள இந்துக்களே உங்கள் வீட்டை அடுத்தவன் ஆகிரமிப்பு செய்து அவன் உன் வீட்டின் மீது மாடிவீடு கட்டிக்கொண்டாள் நீங்கள் சும்மா இருப்பீர்களா பதில் சொல்லுங்கள் இந்துக்களே

    • Neutral Umpire - Chennai ,இந்தியா

      ஒண்ணுக்கு நாலா இருந்தா ஆக்கிரமிப்பு இல்லியே ..

  • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

    அவமானச் சின்னம் நீக்கப்பட்டால் அது எப்படி மத வெறி ஆகும் ????

  • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

    அவமானச்சின்னம் துடைக்கப்பட்டால் அது எப்படி மதவெறியாகும் ????

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    அந்நியர்கள் ஒரு புராதன சின்னங்களை இடித்து அதன்மீது தங்கள் சின்னங்களைக் கட்டினார்கள் ஆனால் இன்று அடையாளமே தெரியாமல் மிகப்பெரிய ராட்சச இயந்திரத்தை வைத்து அடியோடு இடித்து மண்ணோடு மண்ணாக்கி எந்த ஒரு சுவடும் இல்லாமல் மற்ற சின்னங்களுக்கு வழி வகுக்கின்றனர், பாராட்டுக்கள், இதுதான் உண்மை, வந்தே மாதரம்

  • Indian - Vellore,இந்தியா

    இந்த கேஸ் ஒரு முப்பது வருடம் நடக்கும் அதுவரை இவ்வுலகில் யார் இருப்போம் யார் இல்லாமல் போவார்கள் என்று இறைவன் அறிவான். உலகில் இருக்கும் வரை நல்லதை செய்வோம் நல்லதை நினைப்போம்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்