dinamalar telegram
Advertisement

விஐபி.,க்கள் மீது தாக்குதல் நடத்த சதி: பயங்கரவாதி கைது

Share
Tamil News
ரபியாபாத்: ஜம்மு காஷ்மீரின் சோபோர் மற்றும் ரபியாபாத் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் , விஐபி.,க்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஒருவனை ராணுவ அதிகாரிகள் கைது செய்தனர்.
இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், உளவுத்துறையினர் அளித்த தகவலின் பேரில், ராணுவத்தினர் மற்றும் ரபியாபாத் போலீசார் ரோஹாமா மற்றும் ரபியாபாத் பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். அதில், ஹண்ட்வாரா பகுதியை சேர்ந்த ரிஸ்வான் ஷபி லோன் என்ற பயங்கரவாதியை கைது செய்ததுடன், பிஸ்டல் மற்றும் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவன், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பிற்காக பணியாற்றி வந்துள்ளான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரபியாபாத் மற்றும் சோபோர் பகுதிகளில் வி.ஐ.பி.,க்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  தீவிரவாதிகள் தேச துரோக செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கைக்கு தடை விடிக்கபப்ட்டதால , இவர்கள் திட்டமே திட்டியதால் எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காது, ஆகவே அவர்களுக்கு கவலை இல்லை, நாம்தான் சமூக விரோதிகளின் தயவில் இனி கப்பம் கட்டிக்கொண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், அந்த நிலை கண்டிப்பாக வரும், தவறாக கூறவில்லை திருட்டு வரி என்ற ஒரு வரியைக் காட்டினால் அந்த துரையின் அதிகாரிகள் நமக்கு பாதுகாப்புக்கு ஏற்படு செய்வார்கள் அமெரிக்க சென்றுவந்தால் விமானநிலையத்தில் இருந்து வீடு வரையில் பாதுகாப்பும் கொடுப்பார்கள் . உணவு சென்றாலும் அப்பாதுகாப்பகவும் இருப்பார்கள், மொத்தத்தில் எல்லாவற்றிக்கும் வரிகட்டவேண்டும், கட்டிவிட்டால் பாதுகாப்பு உறுதி என்ற நிலை உருவாகிவிட்டது . பாதிக்கப்பட்டவர்களுக்கு குளுமையாக இருக்கும் ஆனால் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு எரிச்சலாக இருக்கும், வந்தே மாதரம்

 • PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா

  பயங்கரவாதியில ரெண்டு ரகம்...ஒண்ணு துப்பாக்கி ஏந்தியவன்-இன்னுமொன்று ஏந்தாதவன்-அவன் தான் இந்த நாட்டின் மதிப்புக்குரிய சிட்டிசனாக இருந்துகொண்டு துப்பாக்கி ஏந்தியவவனுக்கு இருக்கவீடு உண்ண உணவு,, மத்த வசதி எல்லாம் பண்ணிக்க கொடுக்கறவன்..காஷ்மீரில் அரசு ஊழியரை கொன்ற கொலை காரர்களுக்கு உளவு சொல்பவர்கள் , கல்லெறி கும்பல் இதெல்லாம் இந்த கேட்டகரி..

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  அங்கு இன்னும் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதிகள் ஒழிக்கப்படவேண்டும்.

  • PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா

   avun

  • PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா

   அவுங்க நெறைய பேருக்கு நம் நாட்டில் ஆதார்,, ஓட்டுரிமை கூட உண்டு தெரியுமோ/ அப்புறம் என்ன ஒழித்துக் கட்டுவது?

 • ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா

  தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் தீயிட்டு வேருடன் பிடுங்க வேண்டும், இந்த உலகில் மத பயங்கரவாதத்தில் அதிகம் பாதிக்க பட்டது நம் பாரத தேசம், மத பயங்கரவாதத்திற்கு முழு காரணம் பாகிஸ்தான் , மற்றும் அரபு நாடுகளில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் தான் , இது எல்லாம் உலகம் அறிந்த உண்மை, ஒரு பயங்கரவாத அமைப்பு ஒரு நாட்டையே கைப்பற்றி ஆட்சி செய்யும் நிலைமை உள்ளது , இந்த பயங்கரவாத அமைப்பு தான் நம் விமானத்தை கடத்தவும், அதை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், சற்று எண்ணி பாருங்கள் மக்களே மும்பை கொடூர காட்டுமிராண்டி தாக்குதல், பார்லியமென்ட் தீவிரவாதி தாக்குதல், பெங்களூரு தாக்குதுல்,செந்திராபாத் தாக்குதல், தினமும் இடைவிடாது நடக்கும் ஜம்மு காஷ்மீர் எல்லை தாண்டிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல், சிரியா ,ஈரான் ,இராக்,பாலசுதீனம் ,லிபிய ,நைரோபி,காந்தாரம் இன்றய ஆப்கான் ,சூடான்,ஈரான்,ஆஃப்ரிக்க கண்டம் பாதி , இதனை நாடுகளில் தீவிரவாதம் பரவி மக்கள் தங்கள் வாழ்கை மற்றும் வாழ்வாரத்தை இழந்து நிற்கிறார்கள், இந்த தீவிரவாதம் நமக்கு தேவையா ??

 • PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா

  சரி விசாரணை தான் முடிந்து விட்டது,,,அப்புறம் என்னஎன்கவுன்டர் தானே? சாகிட்டப்புக்குதுனு முடிக்க வேண்டியது தானே? பிரியாணியெல்லாம் எத்தினி நாள்களுக்கு போடுவது?

Advertisement