dinamalar telegram
Advertisement

மணல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

Share
Tamil News
மானாமதுரை அருகே கல்குறிச்சி வைகை ஆற்று பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்,கிராம மக்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கல்குறிச்சி வைகை ஆற்று பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.இதனை தொடர்ந்து குவாரி ஏலம் எடுத்தவர்கள் மானாமதுரை புதிய வைகை ஆற்றுப் பாலத்தின் அருகில் இருந்து மணல் குவாரிக்கு செல்வதற்காக கடந்த சில நாட்களாக பாதை அமைத்து வந்துள்ளனர். ஆனால் கல்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கல்குறிச்சி அருகே தடுப்பணை கட்டுவதற்காக கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் நடைபெறுவதாக இருந்தனர்.
ஆனால் தமிழக அரசு தனியாருக்கு மணல் குவாரி அமைக்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அதற்காகத்தான் ஆற்றுக்குள் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது என தெரிந்ததை அடுத்து நேற்று காலை தமிழ்நாடு அரசு அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் கல்குறிச்சி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் குவாரி அமைய உள்ள பகுதிகளில் நின்று அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் பாதை அமைக்கும் பணிக்காக கொண்டுவரப்பட்ட பொக்லைன்,ஜேசிபி இயந்திரங்கள் மீது ஏறி நின்று கோஷம் போட்டு மணல் குவாரி அமைப்பதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
Tamil News
Share
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • sethusubramaniam - chennai,இந்தியா

    இதெல்லாம் ஜுஜுபி போராட்டம். ஒரே வாரத்துல பிசுபிசுத்துப்போயிடும். ஆளும்கட்சின்னா சும்மாவா

Advertisement