dinamalar telegram
Advertisement

சாலை விபத்தில் ஒருவர் பலி

Share
நந்தம்பாக்கம்: சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராகேஷ், 27; வாடகை வாகன நிறுவன ஓட்டுனர். இவரது நண்பர் வினோத், 30; சோலார் நிறுவன ஊழியர்.இருவரும், நேற்று அதிகாலை உணவு தேடி, மவுன்டில் இருந்து மணப்பாக்கம் நோக்கி, 'டி.வி.எஸ்., அப்பாச்சி' இருசக்கர வாகனத்தில் சென்றனர். குடிபோதையில் இருந்த ராகேஷ், வாகனத்தை அதிவேகமாக ஓட்டியுள்ளார்.நந்தம்பாக்கம் ராணுவ பகுதியில் சென்ற போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, இருவரும் கீழே விழுந்தனர். இருவரும், 'ஹெல்மெட்' அணியாததால், வினோத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் இருவரையும், '108' ஆம்புலன்ஸ் வாயிலாக, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத் இறந்தார். இது குறித்து, மவுன்ட் போக்குவரத்து போலீசார் விசாரித்து, ராகேஷை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement