இருவர் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இருவரும் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரித்ததில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ராம்குமார், 32, சென்னை பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த பெருமாள், 54, என்பது தெரிந்தது. காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் விற்பதற்காக, ஆந்திராவில் இருந்து அவர்கள் இருவரும் கடத்தி வந்த, ௧௬ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலுார் சிறையில் அடைத்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!