கத்தியால் வெட்டிய இருவருக்கு கம்பி
கொடுங்கையூர்: கொடுங்கையூரில் முன்விரோதம் காரணமாக பெயின்டரை கத்தியால் வெட்டியவர்களை, போலீசார் கைது செய்தனர்.சென்னை கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சந்தானம், 50; பெயின்டர்.இவர், நேற்று வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், கத்தியால் தலை, முதுகில் வெட்டி விட்டு தப்பினர். பலத்த காயமடைந்த சந்தானத்தை, அங்கிருந்தோர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த ஹரி பிரசாத், 26; பிரபாகரன், 26, ஆகியோர், முன்விரோதம் காரணமாக சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!