குழந்தைக்கு தாயான சிறுமி போலீசார் விசாரணை
புளியந்தோப்பு: தாயின் ஆண் நண்பருடன் தவறான உறவால், பள்ளி சிறுமி, குழந்தைக்கு தாயானார்.சென்னை ராயபுரம், சூரியநாராயணா தெருவை சேர்ந்தவர் லலிதா, 50. அவர், சென்னை வடக்கு குழந்தைகள் நல அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார். அவர், நேற்று முன் தினம், புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில், 10ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி, தவறான உறவால் தாயானது குறித்து, புகார் செய்தார்.ஓட்டேரியை சேர்ந்த, 40 வயது பெண், தன் 17 வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த சிறுமி, 10ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முத்துகுமார், 50, என்பவருடன், அந்த பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டது. தாயுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி, அந்த சிறுமியையும், முத்துகுமார் பாலியல் உறவுக்கு பயன்படுத்திக்கொண்டார்.அதனால் கர்ப்பமான சிறுமி, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. அதனால், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தை மீறிய, தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குழந்தைகள் நல அமைப்பின் உறுப்பினர் லலிதா அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!