தாய் கண்டிப்பு சிறுமி தற்கொலை
திருவேற்காடு: சரியாக படிக்கவில்லை என தாய் கண்டித்ததால், சிறுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை திருவேற்காடை சேர்ந்தவரின் ௧௧ வயது மகள், அதே பகுதியிலுள்ள பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்தார். கடந்த 6ம் தேதி அவரது தாய், படிக்கும்படி சிறுமியை கண்டித்திருக்கிறார்.அதனால் மனமுடைந்த சிறுமி, தாயின் புடவையால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட பெற்றோர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை 3:30 மணியளவில் சிறுமி உயிரிழந்தார். இது குறித்து, திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!