dinamalar telegram
Advertisement

கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

Share
Tamil News
புதுடில்லி: வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: பல காரணங்களினால், சர்வதேச அளவில், கோதுமை விலை திடீரென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் உணவு பாதுகாப்பும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்பை சந்திக்கும் நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, கோதுமையை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • அப்புசாமி -

  உள்ளூர் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஏற்றுமதிக்கு தடை விதிப்பார்களாம். தனியார் கோதுமையஒ நேத்தி வரை ஏற்றுமதி செஞ்சபோது வேடிக்கை பாத்துக்கிட்டிருந்தாங்க. இவிங்க ஆளுங்களுக்கு மட்டும் 38 சதவீதம் அகவிலைப்படி குடுத்துப்பாங்க. இவிங்க மற்ற ஏழை, நடுத்தர மக்களுக்கு அகவிலைப்படி குடுப்பாங்களா? கேட்டா, மத்திய அரசைக் குறை சொல்றோம்னு ஒப்பாரி...

 • ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா

  ஒரு சிலருக்கு உலகில் என்ன நடக்குது என்று புரிகிறதா அல்லது மத்திய பிஜேபி ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டுளர்களா என்று தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும், எதற்க்காக ஏற்று மதி தடை செய்தார்கள், கோதுமையின் விலை அதிகம் ஆக கூடாது, விலை அதிகரித்தால் மக்கள் பாதிக்கப்படுவர் அதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற நல்ல எண்ணத்தில் தான் செய்தார்கள், கொஞ்சம் மாசம் ஆனதும் விலை ஏறும் அப்போது இவர்கள், மோடி கோதுமையை ஏற்று மதி செய்தார் அதனால் தான் விலை அதிகம், இப்போ பாருங்கள் மக்கள் வாங்க முடியாமல் பட்டினி சாவு நடக்கிறது என்று வீண் பொய் கூச்சல் போடுவார்கள்.

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  கோதுமை வியாபாரிகளே, உங்கள் கோதுமை மூட்டைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளவும். இல்லனா, கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகளும், அல்லக்கைகளும் உங்கள் கோதுமை மூட்டைகளை உங்களுக்கு தெரியாமல் ஆட்டையை போட்டு தங்கள் வீட்டில் தினமும் சப்பாத்தியும், பூரியும், கோதுமை தோசையும், கோதுமை உப்புமாவும் செய்து சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டுவிடுவார்கள்.

 • அப்புசாமி -

  விலை உயர்வினால் எந்த ஒரு நல்லதும் விவசாயிக்குக்.கிடைத்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் செயல்படும் ஏழைப்பங்காளர் அரசு. இப்போ புரியுதா ஏன் வேளாண் மசோதா வெற்றிபெற வில்லை என்று? உள்ளூரில் விலை ஏறினா ஈஜிபுத்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வயத்தில் அடிப்பாங்க. சரி, வெளிநாட்டில் விலை ஏறுதுன்னு ஏற்றுமதி செய்யலாம்னு பாத்தா தடை செய்து வயற்றில் அடிப்பாங்க.

  • தியாகு - கன்னியாகுமரி

   உங்களுக்கு அறிவோ அறிவுண்ணே, ஒவ்வொரு நாட்டிற்கும் குறைந்தபட்ச உணவு பாதுகாப்பு என்று ஒரு வரைமுறை உண்டு. இப்போது ஏற்றுமதியை தடுக்காவிட்டால் கோதுமை விலை மிகவும் உயர்ந்து அது நடுத்தர மக்களை பாதிக்கும். இந்த ஏற்றுமதி தடை சில மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். மீண்டும் நடுத்தர மக்களை பாதிக்காதவாறு விலை குறையும் போது ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும். இப்போது பாதிப்படைய போவது ஏற்றுமதி செய்யும் இடை தரகர்கள்தான். முரசொலி, சமச்சீர் கல்வி மட்டும் படித்து அறிவாலய வாசலில் உதைணாவிற்கு சலாம் போடவேண்டாம்.கொஞ்சம் உலக அரசியலும் படித்து தெரிந்துகொள்ளவும்.

 • Kannan Iyer - Chennai,இந்தியா

  Nalla decision...

Advertisement