dinamalar telegram
Advertisement

கோவையில் 9 லட்சம் வீடுகளுக்கு குழாயில் காஸ்; வாகனங்களுக்காக 273 காஸ் நிலையங்கள்!

Share
கோவையில் 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலமாக காஸ் விநியோகிக்கும் திட்டத்தின் முக்கிய அம்சமாக, இயற்கை எரிவாயுவை இருப்பு வைக்கும் 'சிட்டி கேட் ஸ்டேஷன்' கட்டுமானப் பணி முடிவு பெற்று திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 783 வீடுகளுக்கு, குழாய் மூலமாக காஸ் விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம், இந்த பணியை மேற்கொள்கிறது. இதற்காக, கோவை மாவட்டத்தில், 230 கி.மீ.,க்கு இரும்புக்குழாய்கள் பதிக்கும் பணியை இந்நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. இதுவரை 65 கி.மீ.,க்கு பணி முடிவடைந்துள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் குறிச்சி மற்றும் மலுமிச்சம்பட்டி பகுதிகளில், வீடுகளுக்கு குழாய் மூலமாக காஸ் விநியோகிக்கும் திட்டம் துவங்குமென்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்இவற்றைத் தவிர்த்து, மாவட்டத்தில் வாகன எரிவாயு விநியோகிப்பதற்கு 273 சி.என்.ஜி., ஸ்டேஷன்களைத் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 10 ஸ்டேஷன்கள் துவக்கப்பட்டுள்ளன.இருப்பு மையம் திறப்பு இவை அனைத்துக்குமான இயற்கை எரிவாயுவை இருப்பு வைக்கும் மையமான 'சிட்டி கேட் ஸ்டேஷன்' மற்றும் 'மதர் ஸ்டேஷன்', கோவை, பிச்சனுாரில் கட்டப்பட்டுள்ளது.


இயற்கை எரிவாயு தேவை

இந்த மையம், ஒரு மணி நேரத்துக்கு 13 ஆயிரம் க்யூபிக் மீட்டர் எரிவாயு கையாளும் திறன் கொண்டது. வரும் 2025 வரையிலான கோவையின் இயற்கை எரிவாயு தேவையை இது பூர்த்தி செய்யும். இந்த மையத்துக்கு கொச்சி முனையத்தில் இருந்து இயற்கை எரிவாயு கொண்டு வரப்படுகிறது. பிச்சனுாரில் அமைந்துள்ள 'சிட்டி கேட் ஸ்டேஷன்' இயற்கை எரிவாயு இருப்பு மையத்தை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் (பைப்லைன்ஸ்) நானாவேர் திறந்து வைத்தார்.
அடுத்த ஆண்டுக்குள் 41 மையங்கள்!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கோவை மேலாளர் சுரேஷ் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு, இயற்கை எரிவாயு தங்கு தடையின்றி கிடைப்பதற்கு, இந்த இருப்பு மையம் உதவும். அடுத்த ஆண்டுக்குள் கோவையில் 41 இயற்கை எரிவாயு விநியோக மையங்கள் துவக்கப்படும். வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு பரவலாக கிடைக்கவும், விலையை மேலும் குறைக்கவும், கூடுதலாக ஆன்லைன் சி.என்.ஜி., ஸ்டேஷன்கள் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.எரிவாயு விலை குறையும்!

கோவையில் வீடுகளுக்கு குழாய் மூலமாக காஸ் வினியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, காஸ் விலை குறையும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். கோவையில் தற்போது எரிவாயு இருப்பு மையம் (சிட்டி கேட் ஸ்டேஷன்) திறக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கை எரிவாயுவின் விலை ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதை (ஒரு கிலோ ரூ.79.17) சுட்டிக்காட்டுகின்றனர்.


- நமது சிறப்பு நிருபர் -

Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

 • Barani - Cbew,இந்தியா

  Gas pipeline is not big issue for house hold. Here past 30years there was no drainage cross tamilnadu . Because highly corrupt and useless work. Still we don't have drainage and rain water harvesting, under cable electricity wire, telephone lane. Don't compare Coimbatore with other city. Many projects are done in Chennai and other's city of our Tax, we are largest tax paying city abd don't get one solution of all project.We needed all scheme in first to Coimbatore abd may have funded to other city.

 • Somiah M - chennai,இந்தியா

  வீடுகளுக்கு எரிவாயு திட்டம் என்பது மிக சிறப்பாணத்திட்டமே .குடி நீர் வழங்கும் திட்டம் போல் அவ்வப்பொழுது தடை இல்லாமல் இருக்கவேண்டும் .

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

  தமிழகத்திற்கு இப்போது தான் பைப் லைன் கேஸ் திட்டமே வருகிறது..... ஆனால் டெல்லி, குஜராத், மும்பை போன்ற பல இடங்களில் எப்போதோ வந்துவிட்டது.... விலையும் குறைவு.... நார்மல் சிலிண்டர் விலையைக் காட்டிலும் விலை குறைவு..... மீட்டர் உண்டு.... இங்க இப்போதான் வருது.... அதுவும் தென் மாவட்டங்களுக்கு கொடுக்காமல் கோவை மற்று ம்சென்னைக்கே அனைத்துத் திட்டங்களும் செல்கிறது.... வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது....ன்னு சொன்னது இதே திமுக அரசாங்கம்தான்....

  • Sai - Paris,பிரான்ஸ்

   டெல்லி, குஜராத், மும்பை போன்ற பல இடங்களில் எப்போதோ வந்துவிட்டது...நீரே ஒத்துக் கொண்டுள்ளீர். வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது....ன்னு..சரியாத்தானே சொல்லியிருக்கார் அண்ணாதுரை? தமிழ்நாடு சோனியாவுடனோ வாஜ்பேயியுடனோ கூட்டணி வைத்து எந்த பயனும் அடையவில்லை சரிதானே? திமுக அரசாங்கம் இங்கே தொடர்ந்து ஆட்சியிலே இருக்கிறதா? MGR ஜெயலலிதாவுக்கெல்லாம் நீங்க ஓடி ஓடி ஒட்டு போடவில்லையா? ஜெயலலிதாவை ஆறுமுறை முதல்வராக்க வில்லையா? போன தேர்தலுக்குமுன் இந்து விரோத தீய த்ராவிஷ மூர்க்கன்கள் ஆட்சிக்கு வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வரிந்து கட்டவில்லையா?

  • visu - Pondicherry,இந்தியா

   சொல்லி கொண்டே இருந்தால் போதுமா ஹிந்தி எதிர்ப்பு என்கிறார்கள் ஆனால் பல மத்திய அரசு தமிழக அலுவலகங்களில் இந்தி தான் விமான நிலையங்களில் தமிழ் தெரியாத காவலர்கள் இந்தி தெரிந்தால்தான் மத்திய அரசு பனி என்று இருப்பதய் இந்த அரசுகள் ஏதும் செய்ய வில்லை

 • Mayuram Swaminathan - Chennai,இந்தியா

  மும்பை தில்லி மற்றும் சில வட மாநிலங்களில் குழாய் மூலம் காஸ் விநியோகிக்கும் திட்டம் பத்து வருடங்களுக்கு மேலாக செயல் பட்டுவருகிறது. ஆனால் மிகவும் முற்போக்கான மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் முக்கியமாக சென்னை நகரில் வீடுகளுக்கு எரிவாயுt கிடைக்கும் திட்டம் எப்பொழுது நிறைவேறும்?

  • Sai - Paris,பிரான்ஸ்

   மோடிக்கு ஒரு ஈமெயில் தட்டிவிடுங்கள்

 • Kumar - Madurai,இந்தியா

  மதுரையில் எல்லா இடங்களிலும் நல்ல ரோட்ட போட்டு. தேவையான இடங்களில் பாலங்களை கட்டுங்கள். ஒரு இடத்திற்கும் போக முடியவில்லை. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

Advertisement