உலக குத்துச்சண்டை: லவ்லினா அதிர்ச்சி தோல்வி
இஸ்தான்புல்: உலக குத்துச்சண்டை தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லவ்லினா தோல்வியடைந்தார்.
துருக்கியில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 93 நாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 66 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் லவ்லினா, இங்கிலாந்தின் சிண்டி நிகம்பாவை சந்தித்தார். இதில் லவ்லினா 1-4 என அதிர்ச்சி தோல்வியடைந்தார்.75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி, 5-0 என ஹங்கேரியின் டிமியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். 54 கிலோ பிரிவு 'ரவுண்டு-32' போட்டியில் இந்தியாவின் ஷிக் ஷா, அர்ஜென்டினாவின் ஹெர்ரெராவை சந்தித்தார்.இதில் சிக் ஷா 5-0 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.60 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின், இருமுறை 'ஆசிய யூத் சாம்பியன்' தாய்லாந்தின் பார்ன்டிப்பை சந்தித்தார். முதல் சுற்றில் பின்தங்கிய ஜாஸ்மின், இறுதியில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!