சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று துவக்கி வைக்கிறார்.
இக்கோயில் அஷ்டாங்க விமானம் மிக பிரசித்தி பெற்றது. இந்த கோபுரத்தில் நின்றுதான் ராமானுஜர் மந்திர உபதேசத்தை பொதுவெளியில் வெளியிட்டார். இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு வேய திட்டமிடப்பட்டது. மதுரை ஆண்டாள் பேரவையினர் 36 கிலோ தங்கம் வழங்க உள்ளனர்.
முதற்கட்டமாக 4 கிலோ வழங்கியுள்ளனர். கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பில் உள்ளது. தங்கத்தகடு வேயும் பணியை துர்கா இன்று காலை துவக்கி வைக்கிறார். ஸ்டாலின் முதல்வராக இக்கோயிலில் துர்கா நேர்ந்து கொண்டதாகவும், அதை நிறைவேற்ற இன்று வருவதாகவும் கட்சியினர் கூறினர். மாலை சித்திரை தேரோட்டம் நடக்கிறது. சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் வரவேற்பு அளிக்க உள்ளனர்.
-நமது நிருபர்-

ஒரு பக்கம் 200 கோவில்கள் இடித்து தள்ள வேண்டியது.மறுபக்கம் நாடகம் ஆட வேண்டியது.கழகத்தின் இரட்டை வேடம்.