இளையான்குடி: பத்து ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய சொத்துக்களை, லஞ்சம், ஊழல் மூலம் தி.மு.க., ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது,'' என இளையான்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இலங்கையில் ராஜபக்சே ஆட்சி மாறி ரணில் விக்ரமசிங்கே ஆட்சி வந்தாலும் அங்குள்ள பொருளாதார சிக்கல் தீராது. முதல்வர் ஸ்டாலின் ஈழத்தமிழர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் அவர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கியூ பிராஞ்சையும், சிறப்பு முகாமையும் கலைக்க வேண்டும். இவை இரண்டையும் கலைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும். பத்து ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஒரு ஆண்டில் செய்துள்ளோம் என தி.மு.க., கூறுகிறது. ஆம்... பத்து ஆண்டுகளில் ஊழல், லஞ்சமாக பெற்று சேர்க்க வேண்டியவற்றை ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டனர். இன்னும் 50 ஆண்டில் சேர்க்க வேண்டியதை அடுத்த நான்கே ஆண்டில் சேர்த்துவிடுவர்.இருமொழி கொள்கை என்பது ஏமாற்று வேலை. மும்மொழி கொள்கை என்பது மோசடி வேலை. பா.ஜ., அரசு தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தியதை பேசுகிறது. தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைகளாக தெரிவிக்கின்றனர், என்றார்.
நீங்களும்தானே தூபம் போடீர்கள்...நீங்கள் இவர்களின் பி டீம் தானே..
பத்து ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஒரு ஆண்டில் செய்துள்ளோம் என்று சொல்லி மீதி நாட்களிலும் இப்படியேதான் செய்யும் இந்த அரசு. ஜெ என்றால் சட்டம் ஒழுங்கு, இலவச அரிசி, ஜெ இலவச மின்சாரம் அதுவும் தடையில்லமல், காவேரி நீர் உரிமை மீட்பு , முல்லை பெரியார் நீர் உரிமை, அட்மினிஸ்டரேஷன் அதிகாரிகள் பயப்பட்டனர், வியாபாரிகள் நிம்மதி, அதே போல் எம் ஜி ஆர் என்றால் சத்துணவு, கிருஷ்ணா நதி நீர், அதே போல் காமராஜர் என்றால் இலவச கல்வி, பள்ளி குழந்தைகளுக்கு இலவச சத்துணவு இப்படி மக்கள் கூறுவார்கள். ஆனால் காமராஜுக்கு பிறகு தி.மு.கட்சி திட்டங்கள் பேப்பரில் வரும், வாய் சவடால் வசனத்துடன், அப்படியே செய்தாலும் ஒரே சுருட்டல், விஞ்ஞான முறை ஊழல், மிரட்டல் தான் என்று மக்கள் சொல்ல்கிறார்கள்.
முடி உள்ளவர் குடுமி வைத்துகிறார்
ஊழல் கழகங்களுக்கு மாற்று உருவாக வேண்டும் மக்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும் லஞ்சமும் மதுவும் இரண்டு கண்களாக ஊழல் கழகங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
வாழ்த்துக்கள் சுப்பு அவர்களே, செபாஸ்டியன் சைமனே எழுதியிருந்தால்கூட இவ்வளவு அருமையாக வந்திருக்காது. அவரே இதைப் படித்தால் நிச்சயம் ரசித்து சிரிப்பார்.
நீங்களும்தானே தூபம் போடீர்கள்...நீங்கள் இவர்களின் பி டீம் தானே..