dinamalar telegram
Advertisement

ரகளை மாணவர்களுக்கு இந்த தடவை மன்னிப்பு!

Share
Tamil News
சென்னை : அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு, பொது மன்னிப்பு வழங்க, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக, அரசு பள்ளி மாணவ, மாணவியர் சிலரின் அட்டகாசங்கள், பெற்றோரையும், கல்வியாளர்களையும் கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த பிரச்னை எல்லை மீறி சென்றதால், ரகளையில் ஈடுபடும் மாணவ - மாணவியர் பள்ளியை விட்டு வெளியேற்றப்படுவர் என்றும், அவர்களது மாற்று சான்றிதழான டி.சி.,யில் 'மோசமான நடத்தை' என குறிப்பிடப்படும் என்றும், அரசு அறிவித்தது.
ஆனால், இந்த நடவடிக்கை மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்து, அவர்களை சமூக விரோதிகளாக மாற்றும் ஆபத்து உள்ளதாக, கல்வியாளர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, தற்போது ரகளையில் ஈடுபட்டு சிக்கியுள்ள மாணவ - மாணவியருக்கு பொது மன்னிப்பு வழங்கவும், டி.சி.,யில் நடத்தையை குறிப்பிட வேண்டாம் என்றும், பள்ளிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

  • Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா

    டி.சி.,யில் நடத்தை குறிப்பிடப்படாவிட்டாலும், அந்த செய்தியை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி நிறுவனங்களும் படித்திருக்கும். அவர்கள் கட்டாயம் அப்படிப்பட்ட மாணவர்களை அவர்கள் பள்ளியில் சேர்க்கமாட்டார்கள்.

  • PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா

    p //////

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    எதுக்குப் பொது மன்னிப்பு எல்லாம்.... ஃபாதர் பொன்னையாவ வரச் சொல்லி பாவ மன்னிப்பு கொடுத்துட்டா போச்சு.... மீண்டும் பாவம் பண்ணலாம்....

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    எழுபது ஆண்டு காலமாக பள்ளிகளில் "நன்றாகத் தமிலை வால" வைத்தார்கள். இப்போது பள்ளி மாணவர்களை, எதிர்கால தமிழ் மக்களை. உருபட்டாற்போலத்தான்.

  • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

    ஆசிரியர் காலில் விழுந்து இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்று சொல்ல சொல்லுங்கள் . அந்த ஆசிரியரின் மனமும் குளிரும் மாணவறைகளிடம் அவர்கள் அன்பாக இருப்பார்கள் . மனவர்க்ளும் திருந்துவார்கள் . மன்னிப்பு எல்லாம் இந்த மாணவர்கள் படிப்பு முடியும் தருணத்தில் கொடுக்கலாம் . பள்ளி கல்வி ஓஊயர் கல்வி எல்லா அமைச்சர்களும் சோற்றால் அடித்த பிண்டங்கள் வாழ மாட்டாய்ங்க . ஸ்டுடென்ட் சைலகி தெரியல என்னத்த சொல்ல

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்